
.
இதனை இறைவன் திரு மறையில் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றான். “ அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பற்றி நன்மாறாயம் சொல்லப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகின்றான்.” (16:58)
அதே போன்று நபி(ஸல்) அவர்கள் அழகான சில வளி முறைகளைச்; செய்து காட்டினார்கள். அதாவது ஒருவனுக்கு குழந்தை பிறந்து விட்டால் அதனால் எப்படி சந்தோசம் அடைய வேண்டும் என்பதனை சொல்லியும் செய்தும் காட்டினார்கள்.
அப்படி சொல்லி செய்து காட்டிய வெற்றில் ஒன்றுதான் “அகீகா” வாகும்.
மக்கள் மத்தியில் இவ் வளிமுறை, நடை முறையில் இருந்தாலும் அதனுடைய சட்டம் சரியாகச் செய்யப்படவில்லை என்பதுதான் கவலைக்குறிய விடையமாகும். ஒர் சில உலமாக்கள் கூட இச் சட்டத்தை மக்களுக்கு சொல்வதில் தவறிலைத்து விடுகின்றார்கள்.
எனவே இவ்வாய்வானது அகீகாவின் சட்டத்தை முழுமை கொண்டதாகும்.
அகீகா என்றால் என்ன ?
இதனை மொழி நடையில் : வெட்டுதல் அல்லது இரத்தத்தை ஓட்டுதல் எனப்படும்.
பரிபாசையில் : குழந்தை பிறந்து எழாவது நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அறுக்கப்படும் அல்லது அறுத்துக் கொடுக்கப்படும் ஆட்டுக்குச் சொல்லப்படும்.
அகீகா எனும் பெயரில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறு பாடு காணப்படுகின்றது. அதாவது “நபி(ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அள்ளாஹ் இறத்தம் ஓட்டுவதை விரும்புவதில்லை எனக் கூறினார்கள் அவர்கள் அகீகா எனும் பெயரை வெறுப்பது போன்று சொன்னார்கள் அப்போது ஸஹாவாக்கள் அள்ளாஹ்வுடைய தூதரே எங்களுடைய ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது (அதைப் பற்றி) நாங்கள் கேட்கின்றோம் அதற்கு நபி(ஸல்) அவர்கள் யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் அகீகா எனும் பெயரை வெறுப்பது போன்று சொன்னார்கள். ஆகவே அகீகா எனும் சொல்லை பயன் படுத்தக் கூடாது என சிலர் வாதிடுகின்றார்கள்.
“ ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீகாவைக் கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய எழாவது தினத்தில் அதற்காக அறுக்கப்படும், தலை முடி மலிக்ப்படும், அத்தினத்திலே பெயர் சூட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்”
(அறிவிப்பவர்: சமுறா (ரலி) , ஆதாரம் : அபூ தாவுத் 2839)
அகீகா எனும் வார்த்தையை பயன் படுத்தக் கூடாதா?
அதாவது மேற் சொன்ன இரண்டு ஹதீஸ்களையும் வைத்து பார்க்கும் போது இரண்டு ஹதீஸ்களும் முரண்; படுவதாக தோன்றும.; ஆனால் உண்மை நிலை என்ன வென்றால,; ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஹதீஸ் மன்சூஹான அதாவது இரண்டாவது சொல்லப்பட்ட ஹதீஸால் மற்றப்பட்டதா காணப்படுகின்றது.
எனவே மற்றப்பட்ட ஹதீஸ் இருந்தாலும் அதனை நாம் நடைமுறைப் படுத்துவதில்லை என்கின்ற சட்டத்தை நாம் அறிந்தே இருக்கின்றோம்.
எனவே அகீகா என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் எவ்வித தடையும் கிடையாது. அதே போன்று “அத் தன்சீக், அத்தபீஹா” என்ற வார்த்தைகளையும் பயன்படுத்தலாம்.
அகீகாவின் சட்டம்
அகீகா கட்டாயக் கடமையா? அல்லது சுன்னத்தான விடையமா ? என்பதில் இஸ்லாமிய அறிஞ்சர்கள் கருத்து முரண்பட்டுக் கொள்கின்றார்கள்.
அகீகாவின் யதார்த்தமான சட்டம் என்ன? அதாவது நான்கு மத்ஹப் இமாம்களும் தங்கள் வாழ்ந்த காலத்துக்கு எற்பவும,; தாங்கள் ஹதீஸை விளங்கியதுக் கேற்பவும் மக்களுக்கு விளக்கங்களைச் சொன்னார்கள்.
எந்த இமாம்கள் எந்தக் கருத்தைச் சொன்னார்கள் என்பதை விட நாம் நேரடியாக எந்தக் கருத்து சரியானது என பார்பது சிறந்த தாகும்.
அதாவது அகீகா சட்டமானது சுன்னதான விடையமாகும். நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் இருந்து நாங்கள் இந்த சட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம். “யார் தன்னுடைய குழந்தைக்கா அறுவையிட விரும்புகின்றாறோ அவர் அதனைச் செய்யட்டும்.”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் யார் விரும்புகின்றார்களோ என்ற வார்த்தை போதும் நாம் அகீகாவினுடைய சட்டத்தை விளங்கிக் கொள்ள. அதே போன்று இன்னும் பல ஹதீஸ்கள் அகீகாவின் சட்டத்தை விளக்கக் கூடியதாக வந்துள்ளது.
(பார்க்க : திர்மிதி 1515, நஸாயீ 4212, முஸ்னத் அஹ்மத் 6713, ஹாகிம் 4 \238, முஅத்தா 1066,1838, இப்னு மாஜாஆ 3164)
இவ் ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது அகீகா ஒரு சுன்னத்தான விடயமாகும்.
இறைவன் திருமறையில் கூறுவது போன்று “ நம்பிக்கை கொண்டு நல்லரங்கள் செய்வோரே சுவனவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். எவரையும் நாம் அவர்களின் சக்கதிக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை” (7:43)
எனவே தங்களைத் தாங்களே சிரமத்தின் பக்கம் கொண்டு செல்ல வேண்டாம்.
எத்தனை ஆடு அறுக்க வேண்டும்?
ஆண் குழந்தையாயின் இரு ஆடுகள், பெண்குழந்தையாயின் ஒரு ஆடு. “நபி(ஸல்) அவர்கள் யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)
குறிப்பு : அதாவது ஓர் சிலர் கேட்கின்ற கேள்விதான் இரண்டு ஆடு அறுக்க முடியவில்லையாயின் ஒரு ஆடு அறுக்க முடியுமா? இவ் விடயத்தில் இமாம்கள் கூறுகின்ற விடயம் என்ன வென்றால் தன்னால் முடிய வில்லையாயின் அதனை விட்டு விடுவது சிறந்ததாகும். ஒரு ஆடு அறுப்பதில் எத்தடையுமில்லை எனக் குறிப்பிடுகின்றார்கள். (அள்ளாஹ் மிக அறிந்தவன்)
எப்போது அறுக்கப்படும் ?
குழந்தையின் ஏழாவது வயதில் அறுக்கப்படும். “ ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீகாவைக் கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய எழாவது தினத்தில் அதற்காக அறுக்கப்படும், தலை முடி மலிக்ப்படும், அத்தினத்திலே பெயர் சூட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்”
(அறிவிப்பவர்: சமுறா (ரலி) , ஆதாரம் : அபூ தாவுத் 2839)
ஒர் சிலரிடம் சில சந்தேகங்கள் ஏற்படலாம.; அதாவது குழந்தை பிறந் தினத்தை எப்படி கணக்கிடுவது என்று. உதாரணமாக குழந்தை சனிக் கிழமை பிறந்தால் வருகின்ற வெள்ளிக் கிழமை அறுக்கப்படும். குழந்தை பிற தினத்திலிருந்து நாள் கணக்கிடப்படும்.
எழுவயதின் பின் அறுக்கலாமா? என்றால் முடியாது. நபி (ஸல்) அவர்களுடைய செய்தி தெளிவாக வந்துள்ளதினால். ஒரு குழந்தை ஏழு வயதைத் தாண்டும் என்றால் ஆடு அறுத்துக் கொடுக்க முடியாது. அதே போன்று ஒர் சிலர் முன் வைக்கும் ஆதாரம்தான் ஆயிஷா (ரலி) அவர்களின் செய்தி. அதாவது “ ஏழாம் வயதில் இல்லை(ஆடு அறுக்கப்பட வில்லை) என்றால், பதின் நான்காம் நாள் அறுக்கப்படும், அதிலும் இல்லை (ஆடு அறுக்கப்பட வில்லை) என்றால,; இருபத்தி ஒ;றாம் வயதில் அறுக்கப்படும்” என அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம் : ஹாகிம் 4\266)
இந்த ஹதீஸில் “அதாஃ” என்பவரின் மூலம் சொல்லப்பட்ட செய்தியே தவிர வேறில்லை. இதனால் இந்த ஹதீஸ் முத்ரஜ் எனும் தரத்தை அடைவதனால் இதனை பலவீனமான ஹதீஸ் எனப்படும்.
(பார்க்க : இர்வாஹீல் ஹலீல் 4\369) இமாம் அல்பானிக்குறிய புத்தகமாகும்.
எனவே குழந்தை ஏழு வயதைத் தாண்டினால் ஆடு அறுக்க முடியாது என்பது தெளிவாகின்றது.
குறிப்பு : இமாம் இப்னு பாஸ், இப்னு உஹீத்;, அப்துல் ரஸ்ஸாக் அல் அபீபி போன்றோர் ஏழு வயதின் பின் அறுப்பதனால் அவர்கள் பாவியாகமாட்டார்கள் எனக் கூறிப்பிடுகின்றார்கள். ( அள்ளாஹ் மிக அறிந்தவன்.)
எழாவது வயதுக்கு முன் மரணித்து விட்டால் ?
இதில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படும்.
1- உயிரோடு பிறத்தல்.
2- மரணித்துப் பிறத்தல்.
உயிரோடு பிறத்தல் என்பது பிறந்து எழு நாடகளை அடைவதற்கு முன் மரணித்து வி;டல். எனவே அக் குழந்தைக்கு அகீகா இருக்கின்றதா ?
ஹதீஸ்களின் அடிப்படையில் பார்போமானால் குழந்தை ஏழுவயதை அடைதல் அல்லது அதற்கு முன் மரணித்து விடுதல் என்பது பிரித்துக் கூறப்படவில்லை. அதாவது ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் “ ஒவ்வொரு குழந்தைக்கும் அகீகாவுடன்(பிறக்கின்றது) இருக்கின்றது. ஆகவே அதற்காக வேண்டி(ஆட்டினுடைய) இரத்தத்தை ஓட்டுங்கள், அதனை விட்டும் நோவினையை நீக்குங்கள்” (நோவினை எனப்பயன் படுத்தப்பட்டுள்ள வார்த்தை முடியை குறிப்பிடுவதாகும்.)
(ஆதாரம் : புஹாரி 5472)
இன்த ஹதீஸின் அடிப்படையில் பார்போமேயானால, குழந்தை பிறந்து மரணித்துவிட்டாலும் அதனுடைய ஏழாவது வயதில் அதற்காக ஆடு அறுக்கப்படும். அப்படி அறுப்பதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது.
ஆனால் இன்று எம்முடைய சமுதாயத்தில் இன் நடைமுறை கிடையாது. அப்படிச் செய்யப்பட்டால் அதைச் செய்பவர்களை பித்அத் வாதிகளாக பார்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் பல வாராக விமர்சிக்கின்றார்கள். தற்போதய போலி உலமாக்கலாள் கூட இப்படிச் செய்தால் விமர்சிக்கப் படுகின்றது.
இம்முறை நடை முறைப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
அடுத்து மரணித்துப் பிறந்தால்
இவ்விடயத்தில் இமாம்கள் கருத்து வேறுபட்டுக் கொள்கின்றனர். என்றாலும் பெறும் பான்மையான இமாம்கள் உயிரோடு பிறந்து ஏழு வாயதுக்கு முன்னர் மரணித்த குழந்தையின் சட்டம் போன்று தான் இக் குழந்தையின் சட்டமும் வரும் எனக் கூறுகின்றார்கள். (அள்ளாஹ் மிக அறிந்தவன்.)
akeeka kuduka vital eatpadum theengu patri kuripiduha
ReplyDeleteஅகீகா கொடுக்காவிட்டால் தீங்கு ஏற்படும் என்று எந்த ஒரு ஹதீஸிலும் இடம் பெற வில்லை. அள்ளாஹ் மிக அறிந்தவன்.
Deleteassalamu alaikum...ithil neengal 7vathu vayathil endru kuripudeergal..ithumutreelum thavaruu...
ReplyDeleteமிக்க நன்றி 7 வது வயது என்று தவறுதலா டைப் பன்னி விட்டேன்
Delete7வது வயது என்று type பன்னி இருக்கிரீர்கள்..குழப்பமாக உள்ளது.
ReplyDeleteஅகீகா கொடுக்கப்படும் பிராணியின்
Deleteஎலும்புகள் சம்மந்தமாக எதுவும் பதிவிடவில்லை
மாட்டையும் அகீகா கொடுக்கின்றார்களே
ReplyDeleteAkeeka yaruku kodupadu artham
ReplyDeleteAkeeka yaruku kodupadu artham
ReplyDeleteஅகீகா விருந்தை குழந்தையின் தாய் தந்தை சாப்பிட கூடாது என்று தவறான புரிதலும் நம் சமுதாயத்தில் நிலவிவருகிறது.
ReplyDeleteAkeekavuku maadu aruthu kudukalama
ReplyDelete